திமுகவில் இணைந்தார் பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,February 28 2017]

பிரபல வில்லன் மற்றும் குணசித்திர நடிகரும் முன்னாள் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமான ராதாரவி திமுகவில் இணைந்தார்.
2002 ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை சைதாப்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராதாரவி, சில ஆண்டுகாலம் அதிமுகவில் இருந்து விலகி இருந்தார். பின்னர் மீண்டும் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் அதிமுகவில் இருந்து வருகிறார்
சமீபத்தில் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி இரண்டாக உடைந்ததை அடுத்து ராதாரவி திமுகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னில்லையில் அவர் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். திமுகவில் இணைந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'தமிழ்நாட்டை காப்பாற்ற மு.க.ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்றும், மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் அனைத்து கருத்துக்களையும் தெரிவிக்கவுள்ளதாகவும் கூறினார்

More News

இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்ட விழாவில் கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் கனவுப்படங்களில் ஒன்றான 'மருதநாயகம்' படத்தின் படப்பிடிப்பை கடந்த 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்னையில் நடந்த விழா ஒன்றில் தொடங்கி வைத்தார்

டெல்லி பல்கலை மாணவிக்கு பதிலடி கொடுத்த சேவாக்

கார்கில் போரில் உயிர்நீத்த தியாகியின் மகளான டெல்லி பல்கலைக்கழக மாணவி கூர்மேகம் கெளர் என்பவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது தந்தையை பாகிஸ்தான் கொல்லவில்லை என்றும் தனது தந்தையை கார்கில் போர்தான் கொன்றுவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல் தேசியவாதம் என்ற பெயரில் பா

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனுஷ் நேரில் ஆஜர்.

பிரபல நடிகர் தனுஷை தனது மகன் என்றும் சிறு வயதில் காணாமல் போனவர் என்றும் மதுரையை அடுத்த மேலூரை சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெறவிருப்பதால் நடிகர் தனுஷ் இன்று நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்....

அஜித்தின் 'விவேகம்' ரிலீஸ் தேதி இந்த இரண்டில் ஒன்றுதான்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் ஒருசில நாட்களில் அஜித் உள்பட 'விவேகம்' படக்குழுவினர் மீண்டும் பல்கேரியாவுக்கு படப்பிடிப்புக்காக செல்லவுள்ளனர். இந்த படப்பிடிப்புடன் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வருகிறது....