மீண்டும் பிஸியாகும் நடிகர் ரஹ்மான்: கைவசம் இத்தனை படங்களா?

  • IndiaGlitz, [Monday,January 11 2021]

கடந்த 1986ஆம் ஆண்டு ’நிலவே மலரே’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் ரஹ்மான். இந்த படத்தின் வெற்றியை அடுத்து இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தரின் ’புதுப்புது அர்த்தங்கள்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து கடந்த 90களிலும் 2000ஆம் ஆண்டுகளிலும் பிசியான நடிகராக ரஹ்மான் வலம் வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக குணச்சித்திரம் மற்றும் வில்லன் கேரக்டர்களில் நடித்து வரும் ரஹ்மான் தற்போது மீண்டும் கதாநாயகன் உள்பட ஒரு சில திரைப்படங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் இயக்கி வரும் பிரமாண்டமான திரைப்படமான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ரஹ்மான், இயக்குனர் மோகன் ராஜாவின் உதவியாளர் சுப்புராமன் என்பவர் இயக்கும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அர்ஜுன், ஜெயம் ரவி ஆகியோர் நடித்து வரும் ’ஜனகனமன’ என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் ரஹ்மான், விஷாலுடன் ’துப்பறிவாளன் 2’ படத்திலும் நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வரும் ரஹ்மான், சம்பத் நந்தி என்பவர் இயக்கத்தில் கோபிசந்த் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 90கள் மற்றும் 2000களில் பிசியாக இருந்த நடிகர் ரஹ்மான் தற்போது 2021 புத்தாண்டில் மீண்டும் பிசியாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

62 பயணிகளுடன் மாயமான இந்தோனேஷிய விமானம் என்ன ஆனது? வெளியான பரபரப்பு தகவல்!!!

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் நேற்று திடீரென மாயமானது.

'அப்பதான் தப்பு பண்றவங்களுக்கு பயம் வரும்': அருண்விஜய்யின் 'சினம்' டீசர்

அருண் விஜய் நடிப்பில் ஜிஎன் குமரவேலன் இயக்கிய 'சினம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது 

கோவை வந்த சமந்தா யாரை சந்தித்தார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா கோவை வந்து அங்கிருந்து ஈஷா யோகா மையத்திற்கு சென்று சத்குருவை சந்தித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது 

உயிருக்குப் போராடும் இயக்குநர் பாரதிராஜா ஹீரோ? மனதை உலுக்கும் வைரல் வீடியோ!!!

சினிமா ஒரு மாயக்கண்ணாடி என்பது பெரும்பாலான நேரங்களில் உண்மையாகத்தான் இருக்கிறது.

அன்பு குரூப்புக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பா? சனம், அனிதா எங்கே?

பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையிலான அன்பு குரூப் மற்ற போட்டியாளர்களை வெளியேற்றிக்கொண்டு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த நிலையில் ஒரு வழியாக அன்பு குரூப் கடைசி நேரத்தில்