close
Choose your channels

மனைவி குழந்தைகளுடன் நடிகர் ரகுமான்.. ரம்ஜான் கொண்டாடிய க்யூட் புகைப்படங்கள்..!

Monday, April 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான ரகுமான் சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் ரம்ஜான் கொண்டாடும் புகைப்படங்கள் அவரது சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கிய ’நிலவே மலரே’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரகுமான். அதன் பிறகு அவர் ’வசந்த ராகம்’ ’ஒருவர் வாழும் ஆலயம்’ ‘ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நிலையில் கே பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான ’புதுப்புது அர்த்தங்கள்’ மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான ’சங்கமம்’ ஆகிய திரைப்படங்கள் ரகுமான் திரையுலக வாழ்வில் திருப்பத்தை கொடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் மனைவியின் சகோதரி ஆன மெஹருன்னிசா என்பவரை ரகுமான் திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் ரகுமான் தனது மனைவி குழந்தைகளுடன் ரம்ஜான் கொண்டாடிய புகைப்படம் அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் மதுராந்தகன் என்ற கேரக்டரில் ரகுமான் நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் வெள்ளி அன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.