நடிகர் ராமராஜனுக்கு என்ன ஆச்சு? பரவி வரும் வதந்தியால் பரபரப்பு!

  • IndiaGlitz, [Monday,October 18 2021]

தமிழ் திரை உலகில் சூப்பர் ஹிட் வெற்றிப்படமான ’கரகாட்டக்காரன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ராமராஜன் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று மிக வேகமாக பரவி வரும் நிலையில் இதுகுறித்து ராமராஜன் தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர். அந்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

வசூலில் சாதனை புரிந்து தமிழ் சினிமா வரலாறில் சரித்திரம் படைத்த ‘கரகாட்டக்காரன்’ படம் மட்டுமல்லாமல் பல நூறு நாட்கள் படங்களைத் தந்து தனக்கென ஒரு பாணியில் வலம் வந்தவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ராமராஜனைப் பற்றி தற்சமயம் தவறான வதந்தியைப் பரப்பிவருகிறார்கள். ராமராஜன் பூரண நலத்துடன் இருக்கிறார். யாரும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம்.

இரண்டு படங்களுக்குத் தனது கதையைத் தந்துள்ள ராமராஜன் அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்கு தன்னைத் தயார்படுத்தி வருகிறார் என்பதே உண்மை. ராமராஜன் உடல்நலத்துடனும் மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர் நடிக்கும் படத்தின் தொடக்க விழாவில் கலந்து கொள்வார்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More News

'சோலோவாக ரிலீஸ் ஆகிறதா ரஜினியின் 'அண்ணாத்த': பின்வாங்கும் தீபாவளி படங்கள்!

வரும் தீபாவளி அன்று சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த', சிம்புவின் 'மாநாடு' மற்றும் விஷாலின் 'எனிமி' ஆகிய 3 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு திரைப்படம்

தலைவர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளரை டார்ச்சர் செய்யும் அபிஷேக்!

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று ஒரு போட்டியாளரை வெளியேற்ற நாமினேஷன் படலம் நடக்கும் என்பது அறிந்ததே. அந்த வகையில் இன்றைய முதல் புரமோ வீடியோவில்

தீபாவளி ரிலீஸ் பட்டியலில் இணைந்த மேலும் ஒரு பிரபல நடிகரின் படம்!

வரும் தீபாவளி அன்று ஏற்கனவே ரஜினி, சூர்யா, சிம்பு மற்றும் விஷால் படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் மேலும் ஒரு பிரபல நடிகரின் படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் சூப்பர் அப்டேட்!

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வெந்து தணிந்தது காடு' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கியது என்பதும் இந்த படத்தின் இரண்டு கட்ட

ஷாருக்கான் படத்தில் நடிக்க மறுத்தாரா சமந்தா? என்ன காரணம்?

ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'லயன்' படத்தில் நயன்தாரா நடித்து வரும் கேரக்டரில் முதலில் சமந்தா தான் தேர்வு செய்யப்பட்டு இருந்ததாகவும்