அரசாங்கம் இதுக்கு ஒரு பதில் சொல்லியே ஆகவேண்டும்: ஓட்டு இல்லாத நடிகர் ஆவேசம்

பிரபல காமெடி நடிகர் ரமேஷ் கண்ணா இன்று தனது ஜனநாயக கடமையான ஓட்டு போடுவதற்காக காலை ஆறு மணி முதல் வரிசையில் நின்றுள்ளார். சுமார் ஒரு மணி நேரம் கழித்து உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து நடிகர் ரமேஷ் கண்ணா கூறியபோது, 'எனக்கு வாக்காளர் அடையாள அட்டை இருக்கின்றது. நான்கைந்து முறை இதே பூத்தில்தான் ஓட்டு போட்டுள்ளேன். இப்போது எனக்கு ஓட்டு இல்லை என்றும் என் மனைவிக்கு மட்டும் ஓட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். ஒரே வீட்டில் கணவனுக்கு ஓட்டு இல்லை, மனைவிக்கு ஓட்டு இருக்கின்றது. இது யார் தவறு? அரசாங்கம் இதுக்கு ஒரு பதில் சொல்லியே ஆகவேண்டும்!

தேர்தலின்போது ஓட்டு போடுங்கள் என்று சொன்னால் மட்டும் பத்தாது. தேர்தல் ஆணையம் தனது வேலையை சரியாக செய்ய வேண்டும். என்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததற்கு யார் காரணம்? இப்போது என்னால் ஓட்டு போட முடியவில்லையே? இப்படி இருந்தால் யார் ஓட்டு போட வருவார்கள். சர்கார்' படம் வந்த பின்னர்தான் 49P என்பதே அனைவருக்கும் தெரிய வந்தது. இப்போது இதுக்கு ஒரு படம் வந்தால்தான் ஒரு தீர்வு கிடைக்குமா? என்று ஆவேசமாக கூறினார்.
 

More News

விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது ஜெட் ஏர்வேஸ் 

இந்தியாவின் தனியார் விமான நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது சேவையை நேற்று இரவுடன் தற்காலிகமாக நிறுத்தி கொண்டது.

வரிசையில் நின்று வாக்களித்த சூர்யா, கார்த்தி, ஜோதிகா!

தமிழகத்தில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்

ஓட்டு போட மக்களோடு மக்களாக வரிசையில் நிற்கும் விஜய்!

தமிழ்கத்தில் இன்று வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் ரஜினிகாந்த், அஜித் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

சாலை விபத்து: ஒரே காரில் பயணித்த 2 நடிகைகள் சம்பவ இடத்திலேயே மரணம்

ஐதராபாத் அருகே இன்று நிகழ்ந்த சாலை விபத்து ஒன்று இரண்டு தொலைக்காட்சி நடிகைகள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

வாக்குப்பதிவு தொடங்கியது: ரஜினி, அஜித் ஓட்டு போட்டனர்

தமிழகத்தில் இன்று  38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்