close
Choose your channels

'எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கின்றான்': பிரபல தமிழ் நடிகர் அறிவிப்பு

Thursday, July 30, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் காமெடி மற்றும் குணசித்திர நடிகரான ரமேஷ் திலக், சூதுகவ்வும், நேரம் ஆகிய படங்களில் தனது அபாரமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பின்னர் காக்கா முட்டை, வேதாளம், கபாலி உள்பட பல வெற்றி படங்களிலும் நடித்த ரமேஷ் திலக் தற்போது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் ரமேஷ் திலக், ‘தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூக வலை பக்கத்தில் அறிவித்துள்ளார். அவர் இது குறித்து கூறிய போது ’எனக்கு ஒரு தலைவன் பிறந்து இருக்கின்றான்’ என்று தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஜூலை 30ஆம் தேதி தான் அர்னால்டு, கிறிஸ்டோபர் நோலன், டயானா விக்கர்ஸ் போன்ற பிரபலங்கள் பிறந்தார்கள் என்றும் அந்த வரிசையில் உங்கள் மகனும் பிரபலமாக வருவார் என்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் ரேடியோ ஜாக்கியாக இருந்த ரமேஷ் திலக், கடந்த 2018 ஆம் ஆண்டு ஆர்ஜேவாக பணிபுரியும் நவலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நவலட்சுமி பிரபல ஸ்டண்ட மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.