ஒரு விஜய் அல்ல, ஓராயிரம் விஜய் வந்தாலும்.. நடிகர் ரஞ்சித் பேட்டி..!

  • IndiaGlitz, [Monday,January 01 2024]

நாட்டை காப்பாற்றுவதற்காக ஒரு விஜய் அல்ல ஓராயிரம் விஜய் வந்தாலும் நான் வரவேற்பேன் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகர்களில் ஒருவரான ரஞ்சித் சென்னிமலை முருகன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு வழிபட்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் இல்லாமல் இந்த உலகமே இல்லை. என்னை பொருத்தவரை அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாக்காளரும் அரசியல்வாதி தான் என்று கூறினார்

அப்போது விஜய் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு ’நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும், நல்லவர்கள் அரசியலுக்கு வரவில்லை என்றால் திருடர்கள் சேர் போட்டு உட்கார்ந்து விடுவார்கள். ஒரு விஜய் அல்ல ஓராயிரம் விஜய் வந்து நாட்டை காப்பாற்றினால் எனக்கு சந்தோசம் தான்’ என்று தெரிவித்தார்

நான் அரசியலுக்கு வருவது குறித்து இதுவரை ஆலோசனை செய்யவில்லை, ஒருவேளை நல்லவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தால் எதிர்காலத்தில் அரசியலுக்கு வரலாம்’ என்றும் கூறினார்.

More News

விஜயகாந்த் - இப்ராஹிம் ராவுத்தர் நட்பை திரைப்படமாக எடுக்க போகிறேன்: சொன்னது யார் தெரியுமா?

தமிழ் திரை உலகில் எம்ஜிஆர் - சிவாஜி,  ரஜினி - கமல் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்தது போல், சாதி மதங்களை தாண்டி உண்மையான நட்பாக விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் இருந்தனர்.

தளபதியின் 'GOAT' படத்தின் செகண்ட் லுக்.. அதிரடி ஆக்சன் அவதாரத்தில் டபுள் விஜய்..!

தளபதி விஜய் நடித்து வரும் 68 வது திரைப்படத்திற்கு 'GOAT' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது என்பதும் இந்த போஸ்டர் இணையத்தில்

கமல், ரஜினி பட நடிகையை காணவில்லையா? போலீசார் தேடி வருவதாக தகவல்..!

கமல், ரஜினி பட நடிகை வழக்கு ஒன்றில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நிலையில் அவரை காணவில்லை

சூப்பர்குட் பிலிம்ஸ் 98வது படம்.. மீண்டும் இணையும் 'மாமன்னன்' டீம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில்

பணப்பெட்டியை எடுத்து வெளியேறும் போட்டியாளர் இவராக இருக்கலாம்? மாயாவின் கணிப்பு..!

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் உறவினர்கள் வருகை, டிக்கெட் டு பினாலே டாஸ்க்கை அடுத்து பணப்பெட்டியை எடுக்கும் டாஸ்க் தான் வரும்