ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா தம்பதிக்கு பிறந்த இளவரசி.. வைரலாகும் புகைப்படம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா சமீபத்தில் கர்ப்பமாக இருந்த நிலையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்ததாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிக்கப்பட்டு, புகைப்படமும் பதிவாகியுள்ள நிலையில், அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
காமெடி நடிகர், டான்சர், தொழிலதிபரான ரெடின் கிங்ஸ்லி மற்றும் சங்கீதாவுக்கு 2023 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், சமீபத்தில் சங்கீதா கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மேலும், சங்கீதாவின் கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
"வயிற்றில் குழந்தை வளர்ந்து கொண்டிருப்பதை உணர்வது என்பது ஆச்சரியமானதும் அதிசயமானதும்" என்றும் சங்கீதா தனது கர்ப்ப கால அனுபவங்களைப் பற்றியும் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது சங்கீதாவுக்கு பெண் குழந்தை பிறந்ததாக அறிவிக்கப்பட்டு, ரெடின் கிங்ஸ்லி அந்த குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படமும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. "எங்களுக்கு இளவரசி பிறந்திருக்கிறார். உங்கள் அனைவரது வாழ்த்துக்கள் மற்றும் ஆசீர்வாதங்கள் தேவை" என்றும் அந்த பதிவில் கேப்ஷன் இடப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், நடிகர் தற்போது மூன்று தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார் என்பதும், அந்த படங்கள் அடுத்தடுத்த ரிலீஸாக உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments