close
Choose your channels

தந்தையர் தினத்தில் முதல்முதலாக மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்!

Monday, June 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று தந்தையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்கள் தந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்தனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் தமிழ்த் திரையுலகில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஆர்கே சுரேஷ் தனது மகளின் புகைப்படத்தை முதல்முறையாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலாவின் ’தாரை தப்பட்டை’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான ஆர்கே சுரேஷ் ஒரு தயாரிப்பாளரும் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த ஆண்டு மது என்பவரை ஆர்கே சுரேஷ் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது என்பதும், அந்த குழந்தைக்கு ஐஸ்ஸர்யா என்ற பெயரை வைத்துள்ளதாகவும் இது துர்க்கையின் பெயர் என்றும் ஆர்கே சுரேஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் தனது மகளின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். ஆர்கே சுரேஷ் காரில் உட்கார்ந்து இருப்பது போன்றும் அவரது மடியில் அவரது குழந்தை உட்கார்ந்து போன்றும் உள்ள இந்த புகைப்படத்திற்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.