ஈபிஎஸ் அவர்களை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்: பிரபல நடிகை

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த உத்தரவை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என நடிகையும் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த சீரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவரை தான் பாராட்டுவதாகவும் வீடியோ ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் நடிகை ரோஜா மேலும் கூறியதாவது

கொரோனா வைரஸிடம் இருந்து நாம் பாதுகாப்பாக இருந்து கொண்டால் அது ஒரு ஜலதோஷம் போல் முடிந்து விடும். ஆனால் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் உயிரே போய்விடும். தற்போது டெல்லியில் இருந்து வந்தவர்களால் கொரோனா அதிகமாக பரவுவதாக கூறுகிறார்கள். இவரகள் போன்றவர்களை பார்த்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்யுங்கள். மருத்துவர்கள்14 நாட்களில் உங்களுக்கு கொரோனா இருக்கின்றதா? இல்லையா என்பதை கண்டுபிடித்து முடிவைச் சொல்லி விடுவார்கள். இதனால் நீங்கள் நன்றாக இருப்பது மட்டுமன்றி சமுதாயத்தில் உள்ள அனைவரையும் பாதுகாக்கும் ஒரு நல்ல மனிதராக இருப்பீர்கள்.

இந்த நிலையில் ஒரு குடும்பத் தலைவராக இருந்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தமிழ்நாட்டுக்கே ஒரு அப்பா மாதிரி, கொரோனா விஷயத்திற்காக ஜனங்களுக்காக பார்த்து பார்த்து செய்து வருகிறார். அவரை நான் மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்’ என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்

More News

அமெரிக்காவில் கொரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழக்கக்கூடும்!!! எச்சரிக்கும் வெள்ளை மாளிகை!!!

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் தற்போது அமெர

ஐயா மோடி ஐயா, அவிங்கள வெளக்கமாத்தாலேயே அடிக்கணும்: சூரி

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்

"செல்பி எடுத்து அனுப்பினாலோ போதும்" !!! கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக புதிய செயலி!!!

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகப் பல்வேறு உக்திகளைக் கையாண்டு வருகிறது

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து

கடந்த மார்ச் 13 முதல் 15 வரை டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1130 பேர் கலந்து கொண்டதாகவும்,

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற அரசு மருத்துவர்: சிகிச்சை பெற்ற அனைவரையும் வளைக்க முடிவு

சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் என்றும், அவ்வாறு கலந்து கொண்டு தமிழகத்திற்கு மீண்டும் திரும்பியவர்களில்