சென்னையில் பிரபல இயக்குனரின் மகன் சென்ற கார் விபத்து

  • IndiaGlitz, [Tuesday,January 08 2019]

கோலிவுட் திரையுலக நட்சத்திரங்கள் அவ்வப்போது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் ஒரு பிரபல இயக்குனரின் மகன் ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடித்த 'உழைப்பாளி', 'மன்னன்' , ' சந்திரமுகி' உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் பி.வாசு. இவருடைய மகனும் நடிகருமான சக்தி சென்ற கார் இன்று சென்னையில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நடிகர் சக்தி போதையில் கார் ஓட்டினாரா? என்பது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.