close
Choose your channels

அஜித் ஓட்டிய பைக்கை விற்று தான் வாடகை கட்டினேன்: தமிழ் நடிகர் பேட்டி

Sunday, July 18, 2021 • தமிழ் Comments

அஜித் நடித்த ’தீனா’ படத்தில் அவர் ஓட்டிய பைக்கை விற்று தான் வாடகை கட்டினேன் என தமிழ் நடிகர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்

அஜித் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘தீனா’ என்பதும் ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் திரைப்படமான இந்த படத்தின் மூலம் அஜித்துக்கு ’தல’ என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ’தீனா’ படத்தில் அஜித்தின் அடியாட்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் சம்பத்ராவ். இந்த படத்தில் அஜீத் ஓட்டிய புல்லட் இவருக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’தீனா’ படத்தில்தான் முதன்முதலாக அஜித்தின் பக்கத்தில் இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானேன் என்றும் அஜித்தின் ரசிகர்கள் பலர் என்னை அடையாளம் கண்டு ஆட்டோகிராப் கேட்டபோது மகிழ்ச்சியின் உச்சத்தில் சென்றேன் என்றும் கூறினார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு வாடகை கூட செலுத்த முடியாமல் இருந்த நிலையில் ’தீனா’ படத்தில் அஜீத் ஒட்டிய புல்லட்டை விற்றுதான் வாடகை கொடுத்தேன் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz