தமிழக முதல்வரை சந்தித்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,August 27 2019]

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவிருக்கின்றார். அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு செல்லும் முதல்வர் அங்குள்ள தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொள்கிறார். மேலும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கும் நிகழ்ச்சி, அமெரிக்க வாழ் தமிழர்களை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்ச்சி ஆகியவற்றிலும் முதல்வர் கலந்து கொள்ளவுள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு முதல்வர் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி தமிழகம் திரும்பவுள்ளார்.

இந்த நிலையில் நாளை முதல்வர் பழனிச்சாமி வெளிநாடு பயணம் செல்ல உள்ள நிலையில் இன்று அவரை நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் சந்தித்தார். சென்னை கிரின்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பில் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்திற்கு சரத்குமார் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்

இதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

அத்திவரதர் போல் ரஜினியை வீழ்த்திய விஜய்: சீமான் ஆவேச பேச்சு

காஞ்சிபுரத்தில் 48 நாட்கள் காட்சியளித்த அத்திவரதர், திருப்பதி ஏழுமலையானை வீழ்த்தியது போல், தம்பி விஜய், ரஜினிகாந்தை வீழ்த்தியுள்ளது நமக்கு பெருமை தான்

சட்டையை மாற்றுவது போல் பெண்களை மாற்றும் கவின்: சாக்சி குற்றச்சாட்டு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று 'இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற தகுதியானவர் என்று ஒவ்வொருவரும் ஒரு காரணத்தை கூற வேண்டும் என்று பிக்பாஸ் டாஸ்க் ஒன்றை அளித்திருந்தார் 

கவின் -லாஸ்லியாவை அடிக்க கை ஓங்கும் வனிதா!

பிக்பாஸ் வீட்டில் கிராமத்து டாஸ்க் என்றாலே சர்ச்சைகளும் கூடவே கலந்து விடும் என்பது முந்தைய வரலாறு. டாஸ்க் என்ற பெயரில் சொந்த விருப்பு வெறுப்பையும் போட்டியாளர்கள் அதில் காண்பித்து வருகின்றனர்.

அம்பேத்கர் சிலை விவகாரம்: பிரபல நடிகர் கருத்து

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலை ஒரு பிரிவினரால் சேதம் செய்யப்பட்ட விவகாரம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது

பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்றதால் கிளைமாக்ஸை மாற்றிய பிரபல நடிகர்!

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து தங்கம் வென்று நாட்டிற்கே பெருமை சேர்த்தார் என்பது தெரிந்ததே