close
Choose your channels

நடிகர் சதீஷூக்கு கிடைத்த முதல் விருது!

Monday, August 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரை உலகின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ் தனது முதல் விருதை பெற்றுள்ள நிலையில் அந்த விருதுடன் கூடிய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜித்தன் ரமேஷ் நடித்த ’ஜெர்ரி’ என்ற திரைப்படத்தில் காமெடி நடிகராக சதீஷ் அறிமுகமானார். அதன்பின் அவர் மதராசபட்டணம், வை ராஜா வை, மான் கராத்தே, வேலாயுதம், தங்கமகன், அண்ணாத்த, ரெமோ உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். மேலும் சதீஷ் நாயகனாக நடித்த ’நாய் சேகர்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் சதீஷ்க்கு சிறந்த அறிமுக நடிகர் என்ற விருது கிடைத்துள்ளது. இந்த விருதுடன் தன் மகள் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷ் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வருகின்றன. குறிப்பாக சதீஷ் மகள் அதற்குள் வளர்ந்துவிட்டாரே என்று ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பார்த்து ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சதீஷ் தற்போது மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இதில் ஒரு படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.