பிக்பாஸில் ஜிபி முத்து: நடிகர் சதீஷின் ரியாக்சன்!

  • IndiaGlitz, [Saturday,September 04 2021]

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஜிபி முத்து கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் சதீஷ் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ரியாக்ஷனை தெரிவித்துள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென ஜிபி முத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டின் முன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்ததை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது

இதனையடுத்து பல்வேறு தரப்பினர் ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அதைப்பற்றி வெளியே செல்லக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படுவார்கள் என்றும் ஜிபி முத்து இதனை வெளியே சொல்லி உள்ளதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் செய்திகள் குறித்து தனது டுவிட்டரில் நடிகர் சதீஷ் கூறியபோது, ‘உள்ள டாஸ்க் லெட்டர மட்டும் படிக்க விட்றாதீங்கப்பா... என்னடா டாஸ்க் கொடுத்துருக்கீங்க.. செத்த பயலுவலா.. நார பயலுவலா’ என்று பதிவு செய்துள்ளார். சதீஷின் இந்த டுவிட் வைரலாகி வருகிறது.

More News

பிக்பாஸ் தமிழ் சீசன் 5: முதல் போட்டியாளர் கன்ஃபர்ம்?

பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் வரும் அக்டோபர் மாதம் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் இந்த சீசனில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது

ஜெயலலிதா நினைவிடத்தில் 'தலைவி' மரியாதை: வைரல் புகைப்படங்கள்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் 'தலைவி'. பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின்

மீண்டும் இணையும் 'மின்சார கனவு' கூட்டணி: இயக்குனர் இவரா?

கடந்த 1997ஆம் ஆண்டு பிரபுதேவா, அரவிந்த் சாமி நடிப்பில் ராஜீவ் மேனன் இயக்கத்தில் இளையராஜா இசையில் உருவான திரைப்படம் 'மின்சாரகனவு

மாலத்தீவில் 'பீச் பேபி' சன்னிலியோன்: வைரல் வீடியோ

தமிழ் திரையுலக நடிகைகள் உள்பட இந்திய திரை உலகில் உள்ள பல நடிகைகள் அவ்வப்போது மாலத்தீவு சென்று வருகின்றனர் என்பதும் மாலத்தீவின் இயற்கை எழில் கொஞ்சும் கடல் பகுதியையும்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த விஜய் பட இயக்குனர்!

சூர்யா நடிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிவரும் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு 51 நாட்களாக காரைக்குடியில் நடைபெற்றது