close
Choose your channels

சச்சின், தோனி, கோஹ்லி இடத்தை பிடித்த நடராஜன்: தமிழ் காமெடி நடிகர் டுவீட்!

Tuesday, January 12, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சச்சின், தோனி, கோஹ்லி இடத்தை நடராஜன் பிடித்து விட்டதாக தமிழ் காமெடி நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

முன்பெல்லாம் சினிமாவில் பாய்ஸ் ஹாஸ்டல் குறித்த காட்சிகள் வரும்போது சுவர்களில் சச்சின் தோனி மற்றும் கோஹ்லியின் போஸ்டர்கள் ஒட்டி இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்படும். ஆனால் தற்போது நான் நடித்து வரும் ஒரு திரைப்படத்தில் அதே போன்ற ஒரு காட்சியில் சச்சின் தோனி கோஹ்லிக்கு பதிலாக நடராஜன் போஸ்டர் இருப்பதுபோல் வைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. அந்த அளவுக்கு நடராஜன் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்று இருப்பதை பார்த்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்று நடிகர் சதீஷ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

மேலும் இந்த காட்சி அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானிசங்கர் நடித்து வரும் படத்திற்காக அமைக்கப்பட்டது என்றும், இந்த படத்தில் தானும் ஒரு கேரக்டரில் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் சதீஷ் குறிப்பிட்டுள்ளார். சதீஷின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.