இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்கணுமோ? சதீஷ் வீடியோவுக்கு நெட்டிசன் கமெண்ட்

  • IndiaGlitz, [Monday,April 13 2020]

சமீபத்தில் திருமணமான நடிகர் சதீஷ் தற்போது கொரோனா விடுமுறையில் வீட்டில் இருந்து வரும் நிலையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் சுவாரஸ்யமான வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ’தமிழ்ப்படம் 2’ படத்தின் கெட்டப்புகளில் ஒன்றான பெண் வேட கெட்டப் குறித்த வீடியோவை வெளியிட்டு அதில் ரசிகர்களுக்கு முத்தமும் கொடுக்கின்றார். இந்த் வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை கமெண்ட் பகுதியில் தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவர் ’இன்னும் எத்தனை கொடுமைகளை பார்க்க வேண்டியது இருக்குமோ? என்று பதிவு செய்துள்ளார். இன்னும் ஒரு நெட்டிசன், ‘இனிமேல் நீங்கள் தான் லேடி சூப்பர் ஸ்டார். நயன்தாராவிடம் தகவல் தெரிவித்து விடுங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்.

‘தமிழ்ப்படம் 2’ படத்தில் நடிகர் சதீஷ் சுமார் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் தோன்றுவார் என்றும் அதில் ஒன்றான ‘எந்திரன்’ படத்தின் ரஜினி கெட்டப் குறித்த வீடியோவை சமீபத்தில் அவர் வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ட்ரோன் மூலம் போதை வஸ்து விற்பனை செய்த இருவர் கைது!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதன் காரணமாக கடந்த 20 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் தவிர

கொரோனா எதிரொலி: தளபதி விஜய்யின் மிகப்பெரிய மனவருத்தம்

கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் ஆட்டுவித்து வரும் நிலையில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து திரை நட்சத்திரங்களும் தங்களுடைய

கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்த கேரள காவல்துறை

உலக நாயகன் நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமலஹாசன் தன்னுடைய சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டிய

கொரோனாவுக்கு எதிரான போரில் களமிறங்கும் பிக்பாஸ் ஜூலி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராளி என்பதால் ஆரம்பத்தில் இவர் மீது நல்ல மரியாதை இருந்தது.

தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் மிக தீவிரமாக பரவி உயிர் இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 106 பேர்களுக்கு