close
Choose your channels

கார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக நடிக்கும் பிரபல நடிகர்!

Friday, April 19, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் கார்த்தியும், நடிகை ஜோதிகாவும் ஒரு படத்தில் அக்கா தம்பியாக நடிக்கவுள்ளனர் என்பதையும் இந்த படத்தை 'பாபநாசம்' புகழ் ஜீத்துஜோசப் இயக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் கார்த்தி, ஜோதிகா இருவருக்கும் அப்பாவாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் கார்த்தி, ஜோதிகாவுக்கு அப்பாவாக பிரபல நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளார். சமீபத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் கார்த்திக்கு அப்பாவாக சத்யராஜ் ஏற்கனவே நடித்திருந்தாலும், ஜோதிகாவுக்கு அப்பாவாக அவர் நடிக்கவிருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

குடும்ப செண்டிமெண்ட் அதிகம் உள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து கொண்டிருப்பதாகவும் இதுகுறித்த தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.