சித்தார்த் நடிக்கும் 4 படங்களின் தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,June 02 2016]

சித்தார்த் நடிப்பில் இந்த ஆண்டு 'அரண்மனை 2' மற்றும் 'ஜில் ஜங் ஜக்' ஆகிய இரண்டு படங்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள நான்கு படங்களின் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது.

1.ஷங்கர் தயாரிப்பில் வெளியான 'கப்பல்' படத்தை இயக்கிய கார்த்திக் கிரிஷ் இயக்கத்தில் உருவாகும் காமெடி படம்.

2. 'பிச்சைக்காரன்' சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் இயக்கும் திரைப்படம்.

3. மலையாள நடிகர் திலிப் மற்றும் சித்தார்த் நடிக்கும் படம். இந்த படத்தை ரதீஷ் அம்பாட் இயக்குகிறார்.

4. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் படத்திலும் சித்தார்த் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

More News

தனுஷின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

 தனுஷ் தற்போது 'தொடரி' மற்றும் 'கொடி' ஆகிய இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டு 'எனை நோக்கி பாயும் தோட்டா'...

தணிக்கை குழுவே தேவையில்லை. 'அழகி' நடிகை பரபரப்பு கருத்து

தணிக்கை குழு தேவையா? அல்லது அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமா? என்பது குறித்து கடந்த சில மாதங்களாக கருத்துக்கள் வெளியாகி வரும் நிலையில்...

நாளை விஜய்சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

கோலிவுட் திரையுலகின் பிசியான நடிகர் என்றால் அது விஜய்சேதுபதிதான் என்று அனைவரும் கூறும் வகையில் கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

'ரெமோ' படத்தின் அதிகாரபூர்வ ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி

சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'ரெமோ' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது...

டைட்டிலை அடையாளமாக கொண்ட தமிழ் நட்சத்திரங்கள்

பொதுவாக ஒரு நபரை சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அந்த நபரின் பெயரை சொன்னாலே போதும். இது பிரபலமானவர்களுக்கும் பொருந்தும். பெயரை சொன்னாலே அவரை பற்றி பாதி சொல்லிவிடலாம்...