சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்: பிரபல நடிகரின் பட டைட்டில்!

  • IndiaGlitz, [Monday,September 20 2021]

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ஒருவர் நடிக்கும் திரைப்படத்திற்கு ’சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட்பிரபு இயக்கிய ’சென்னை-28’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகர் சிவா, அதன்பின்னர் தமிழ்ப்படம், சரோஜா, கலகலப்பு உள்பட பல திரைப்படங்களில் நடித்தார். இந்நிலையில் இவர் தற்போது இடியட், சுமோ, பார்ட்டி, சலூன் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்திற்கு ’சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றதை அடுத்து படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த படத்தில் சிவா ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். மேலும் மாகாபா ஆனந்த் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. விக்னேஷ் ஷா என்பவர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.