கொரோனா நிதி கொடுத்த வெற்றிமாறன், சிவகார்த்திகேயன்: எவ்வளவு தெரியுமா?

  • IndiaGlitz, [Saturday,May 15 2021]

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது இன்றும் கூட தமிழகத்தில் 33 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனாவுக்கு எதிரான தீவிரமான போரில் ஈடுபட்டிருக்கும் தமிழக அரசுக்கு திரையுலக பிரபலங்கள் பலர் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் கொரோனா வைரஸ் தடுப்பு நிதி கொடுத்த தகவல் வெளிவந்துள்ளது. பிரபல இயக்குனர் வெற்றிமாறன் அவர்கள் இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 10 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் முதல்வரை தனிப்பட்ட முறையில் சந்தித்து ரூபாய் 25 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சூர்யா-கார்த்தி, ரஜினி மகள் செளந்தர்யா, அஜித், வைரமுத்து, ஏஆர் முருகதாஸ் உள்பட பலரும் கொரோனா நிவாரண நிதியாக அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தடுப்பூசிகள் உருமாறிய கொரோனாவை சாகடிக்குமா? ஐசிஎம்ஆர் சொல்வது என்ன?

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து கோவேக்சின், கோவிஷீல்டு எனும் இரு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

சசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணியா? தினகரன் மத்தியஸ்தமா?

அரசியலை விட்டு ஒதுங்கி இருக்கும் சசிகலாவுடன் ஓபிஎஸ் புதிய கூட்டணி அமைக்கப் போவதாக சில வதந்தி உலா வந்து கொண்டிருக்கின்றன

கத்திரி வெயிலில் குளுகுளு கிளைமேட்....! ஆனால் கோவைக்கு ரெட் அலார்ட்..!

கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர்.

பட்டுப்பாவாடை தாவணியில் வேற லெவலில் பிக்பாஸ் ஷிவானி: குவியும் லைக்ஸ்கள்!

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்தார் என்பதும் கடைசி நேரத்தில் சிங்கப்பெண்ணாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது

ஷூட்டிங் எப்போ டைரக்டர்? தனுஷ் பட இயக்குனரிடம் 'மாஸ்டர்' நடிகர் கேட்ட கேள்வி!

அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது? என தனுஷ் படத்தின் இயக்குனரிடம் 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது