close
Choose your channels

சிவகார்த்திகேயன் வீட்டு காய்கறித்தோட்டம்: வைரல் வீடியோ

Saturday, June 12, 2021 • தமிழ் Comments

இந்த லாக்டவுன் நேரத்தில் பிரபல நடிகர் நடிகைகள் அனைவரும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் ஓய்வு எடுத்து வருவதால் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பதற்காக சிலர் மொட்டை மாடியில் தோட்டம் ஏற்படுத்தி வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தனது வீட்டில் காய்கறி தோட்டம் ஒன்றை அமைத்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார். 

இந்த காய்கறி தோட்டத்தில் அனைத்து விதமான காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை தான் பயிரிட்டிருப்பதாகவும், இன்னும் நிறைய பயிரிட வேண்டும் என்று தனக்கு ஆசை என்றும் அதற்கு இன்னும் கொஞ்சம் நாளாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்றும் நம்முடைய வாழ்க்கையும் விரைவில் இந்த காய்கறி தோட்டம் போல் பசுமையாக மாறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ’அயலான்’ மற்றும் ’டாக்டர்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் என்பதும் இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ’டான்’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz