சிவகார்த்திகேயனின் திருமண வீடியோ இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

தமிழ் திரை உலகில் எந்த பின்னணியும் இல்லாமல் உழைப்பால் மற்றும் திறமையால் மட்டுமே சாதித்தவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், தமிழ் திரையுலகில் ’மெரினா’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதன்பின் அவர் 3, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், காக்கி சட்டை, ரஜினி முருகன், கனா, நம்ம வீட்டு பிள்ளை என தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக உள்ளார் என்பதும், அவரது திரைப்படங்களுக்கு விநியோகஸ்தர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது என்பதும் வசூல் அளவில் அவரது திரைப்படங்கள் அனைத்தும் திருப்தியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி திருமண வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் ரசித்து, இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா பாதித்த மாஜி அமைச்சர்....! வதந்திகளை நம்பவேண்டாம் என அறிக்கை....!

என்னை குறித்து சமூக வலைத்தளங்களில் உலவி வரும் பொய் மற்றும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்காக நியூசிலாந்து வீரர் செய்த அசத்தல் காரியம்!

சமீபத்தில் இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டனில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான உலகக் கோப்பை டெஸ்ட்

சென்னையில் பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு!

கொரோனா நோய்த்தொற்றினால் ஏற்படும் இணைநோயான பூஞ்சை தொற்றுகளால் இ&&

சேலை கட்டிவந்த மாப்பிள்ளை, வேட்டி உடுத்திய பெண்ணுடன் செய்யும் வினோதத் திருமணம்!

ஆந்திர மாநிலத்தில் வாழ்ந்து வரும் "கும்மா" எனும் குடும்பப் பெயரைக் கொண்டுள்ளவர்கள் திருமணத்தின்போது சில

கொரோனாவை ஒருசில வினாடிகளில் கண்டறியும் ஃபேஷியல் ஸ்கேனர், மாஸ்க்… அசத்தும் புது வரவு!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கண்டறியப்பட்ட கொரோனா நோய்த்தொற்று இன்றுவரை உலகம் முழுவதும்