ஸ்ரீதேவியின் மலரும் நினைவுகள் குறித்து சிவகுமார்

  • IndiaGlitz, [Sunday,February 25 2018]

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு இந்தியாவில் உள்ள திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ஸ்ரீதேவியுடன் மூன்று படங்கள் நடித்த பழம்பெரும் நடிகர் சிவகுமார் அவரது மறைவு குறித்து கூறியதாவது:

குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ, ஹீரோயினாக வளர்ந்தவர்கள்ள் தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர். ஒருவர் கமல்ஹாசன், இன்னொருவர் ஸ்ரீ தேவி. ஆதிபராசக்தி படத்தில் ஜெயலலிதா அம்மையார் மடியில் முருகர் வேடம் இட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீதேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிரிக்கிறது.

'16வயதினிலே' மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது. அதன் பிறகு 'மூன்று முடிச்சு', 'வறுமையின் நிறம் சிகப்பு' என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள். நானும் ஸ்ரீதேவியும் 'கவிகுயில்' , 'மச்சான பார்த்திங்களா', 'சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு' என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம்.

இந்தியில் உச்சம் தொட்ட நடிகை ஸ்ரீதேவியின் வாழ்கை இவ்வளவு சீக்கிரம் முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.

இவ்வாறு நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.

More News

நான் இரண்டுவிதமான ஸ்ரீதேவியை பார்த்துள்ளேன் ரஜினிகாந்த் பேட்டி

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு தனது டுவிட்டரில் ரஜினிகாந்த் இரங்கலை தெரிவித்திருந்தார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.

ஸ்ரீதேவி மரணம்: தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று துபாயில் மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது .அதில் கூறியிருப்பதாவது…

கடவுளை புரூஸ்லி இரண்டு குத்துக்கள் விட வேண்டும்: ராம்கோபால் வர்மா

பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்ரீதேவி மறைவிற்கு சச்சின் உள்பட விளையாட்டு பிரபலங்கள் இரங்கல்

நடிகை ஸ்ரீதேவியின் மறைவு திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் தெரிவித்த இரங்கல்களில் இருந்து தெரிய வருகிறது.

கமல் அரசியலை ஆதரிக்கின்றேனா? கவுதமி விளக்கம்

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை சமீபத்தில் ஆரம்பித்துள்ளார். இந்த கட்சிக்கு திரையுலகில் இருந்தும் ஒருசிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.