நடிகர் சோனுசூட் கொரோனாவால் பாதிப்பு: ஆனாலும் உதவிகள் தொடரும் என உறுதி!

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

பிரபல நடிகர் சோனு சூட், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தாலும், மக்களுக்கு செய்யும் உதவி தொடரும் என அவர் உறுதியளித்துள்ளார்.

கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் திரையுலக பிரமுகர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை உச்சத்தில் இருந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் கோடிக்கணக்கில் ரூபாய் மதிப்பில் உதவி செய்த சோனு சூட் அவர்களுக்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது

இதனை அடுத்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ’எனக்கு இன்று கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து நான் பாதுகாப்பாக என்னை நானே தனிமைப் படுத்திக் கொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி சிகிச்சை பெற்று வருகிறேன். ஆனால் யாரும் கவலைப்பட வேண்டாம், உங்களுடைய பிரச்சினைகளை தீர்க்க எனக்கு போதுமான நேரம் கிடைத்துள்ளது, உதவிகள் தொடரும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போதிலும் மற்றவர்களுக்கு செய்யும் உதவி தொடரும் என கூறிய சோனு சூட் அவர்கள் விரைவில் குணமாக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

நடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம்! அவரே வெளியிட வீடியோ

நடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் கூறியபோது 'திருப்பத்தூர் கல்லூரி

விவேக்கின் செயல் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து கூறியது: வீடியோ

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குறித்து மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்கள் கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது 

மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது… நடிகர் விவேக் மறைவு குறித்து கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!

தமிழ் சினிமா உலகில் மங்காத புகழைப் பெற்றவர் நகைச்சுவை நடிகர் விவேக்.

இன்று மாலையளவில் மறைந்த நடிகர் விவேக்கின் உடல் தகனம்...!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நகைச்சுவை நடிகர் விவேக்.அண்மையில் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில்

விவேக் இறப்பிற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இன்று அவர் காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது