நடிகர் சூரியின் ஈடு செய்ய முடியாத இழப்பு

  • IndiaGlitz, [Tuesday,March 28 2017]

கோலிவுட் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் சூரி. அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள சூரி, இன்று பிசியான நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

இந்நிலையில் நேற்றிரவு 10.15 மணியளவில் சூரியின் தந்தை ஆர்.முத்துசாமி காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த முத்துசாமி சிகிச்சையின் பலனின்றி காலமானார். தந்தையின் மறைவு சூரிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக கருதப்படுகிறது.

சூரியின் சொந்த ஊரான மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள ராசக்கூரில் இன்று மாலை 4 மணிக்கு அவரது இறுதிச்சடங்கு நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தந்தையை இழந்து வாடும் சூரிக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன் மறைந்த முத்துசாமி அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறோம்.

More News

ஜெ.மகன் என்று கூறிய நபருக்கு நீதிபதி பிறப்பித்த அதிரடி உத்தரவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நடிகர் சோபன்பாபுவுக்கும் பிறந்த மகன் என போலி ஆவணங்கள் தாக்கல் செய்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்...

தமிழக மக்களின் எதிர்ப்பையும் மீறி ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு கையெழுத்து. பின்னனி இதுதான்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த முயற்சி செய்தது

'காற்று வெளியிடை' சஸ்பென்ஸை உடைத்த பிரிட்டிஷ் சென்சார்

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதிராவ் ஹைதி நடித்துள்ள 'காற்று வெளியிட' திரைப்படம் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.

த்ரிஷாவுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்த அரவிந்தசாமி

நட்டி நட்ராஜ் நடித்த 'சதுரங்க வேட்டை' திரைப்படம் கிராமப் பகுதிகளில் நடக்கும் ஊழலை எடுத்துக் கூறும் படமாக இருந்த நிலையில் அந்த படத்தின் இரண்டாம் பாகமான 'சதுரங்க வேட்டை 2' திரைப்படம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குற்றங்களை செய்வதை மையமாகக் கொண்டு உருவாகி வந்தது

பிரபல அரசியல்வாதிக்கு லைகா நிறுவனம் அனுப்பியுள்ள வக்கீல் நோட்டீஸ்

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த ஈழத்தமிழர்களுக்கு வீடு வழங்கும் விழாவில் கலந்து கொள்ள முதலில் ஒப்புக்கொண்டிருந்த ரஜினிகாந்த், பின்னர் தமிழக அரசியல்வாதிகள் சிலர் தெரிவித்த எதிர்ப்பு காரணமாக விழாவில் கலந்து கொள்ளும் திட்டத்தை ரத்து செய்தார்.