close
Choose your channels

இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை: அதிர்ச்சி தகவல் தந்த சூரி!

Wednesday, June 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் சூரி தற்போது பிரபல நடிகர்களின் படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வருவது மட்டுமின்றி வெற்றிமாறன் இயக்கிவரும் ’விடுதலை’ என்ற படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார். ’விடுதலை’ திரைப்படம் வெளியான உடன் அவருக்கு நாயகன் வேடத்தில் நடிக்க அதிக வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த அமைப்பு ஒன்று சூரியின் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடந்து வருவதாகவும், அந்த அறக்கட்டளை மூலம் மேல்படிப்பு படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் விளம்பரம் செய்து இருந்தது.

இந்த விளம்பரத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த சூரி, என்னுடைய பெயரில் வெளியாகியுள்ள இந்த விளம்பரம் முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என்றும் ஏற்கனவே நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து போலியான விளம்பரத்தை கொடுத்து உள்ளனர் என்றும், உள் நோக்கத்துடன் செயல்படும் இது போன்ற செயல்களை இனி அவர்கள் நிறுத்திக் கொள்ளாவிட்டால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கல்வி உதவி தேவைப்படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து கொண்டே இருப்பேன் என்றும் ஆனால் அதை இப்படி விளம்பரம் போது செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.