ரஜினியுடன் அதிமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு

  • IndiaGlitz, [Thursday,March 02 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் கார்டன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏவும் நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்துள்ளார். நடிகர் சங்கத்தின் துணைத்தலைவராகவும் உள்ள கருணாஸ், ரஜினியை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சசிகலா ஆதரவாளரான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு கொடுத்த 122 எம்.எல்.ஏக்களில் ஒருவர் கருணாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் சொந்த தொகுதியான திருவாடனை தொகுதி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் கருணாஸ், இன்று திடீரென ரஜினியை சந்தித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினியுடன் இணைந்து 'பாபா', எந்திரன் போன்ற படங்களில் கருணாஸ் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

குளிர்பான ஆலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர். உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஒருபக்கம் நேற்று முதல் தமிழகத்தில் பெப்சி கோக் போன்ற வெளிநாட்டு பானங்களை விற்பதில்லை என்று வணிகள் முடிவெடுத்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து பெப்சி, கோக் உள்பட குளிர்பான ஆலைகள் தண்ணீர் எடுக்க விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீக்கியுள்ளது.

குஷி-2, வாலி-2 படங்களின் ஹீரோக்கள் யார். எஸ்.ஜே.சூர்யா

அஜித் நடித்த 'வாலி' மற்றும் விஜய் நடித்த 'குஷி' என தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களின் வெற்றி படத்தை இயக்கிய பெருமை பெற்றவர் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா.

நெடுவாசலுக்காக ஒரு பாடல். பிரபல இசையமைப்பாளர் திட்டம்

சமீபத்தில் நடந்து முடிந்த இளைஞர்களின் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு வெற்றி போராட்டத்தில் திரையுலகினர்கள் தந்த ஆதரவும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஹிப்ஹாப் தமிழா ஆதி, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் ஜல்லிக்கட்டு குறித்த பாடல் ஒன்றை வெளியிட்டு போராட்டக்கார்களிடமும், மக்களிடமும் எழுச்சியை ஏற்படுத்தினர்...

அருண்ஜேட்லியுடன் பெப்சி நிறுவனத்தின் சிஇஓ அவசர ஆலோசனை

சென்னை மெரீனா உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சமீபத்தில் நடந்த ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தில் பெப்சி, கோக் உள்பட பல வெளிநாட்டு பானங்களை குடிப்பதை நிறுத்த வேண்டும்

தயாரிப்பாளர் சங்க தேர்தல். தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சென்னையில் உள்ள உட்லண்ட்ஸ் திரையரங்கில் நடைபெறும் என்றும், இந்த தேர்தலில் பதிவு செய்யப்படும் வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என்பதையும் சமீபத்தில் பார்த்தோம்...