close
Choose your channels

சொந்த சூனியம், முட்டாள் கூட்டம்: 'இந்தியன் 2': மறைந்த கிருஷ்ணாவின் குடும்ப நண்பர் ஆவேசம்

Thursday, February 20, 2020 • தமிழ் Comments

கமல்ஹாசன் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு தளத்தில் நடந்த கோர விபத்தில் இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணா உள்பட மூவர் பரிதாபமாக பலியான சம்பவம் ஒட்டுமொத்த திரையுலகினர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில் இந்த விபத்து குறித்து திரையுலகை சேர்ந்தவரும் மறைந்த கிருஷ்ணாவின் மாமனாரான மதனின் குடும்ப நண்பருமான வெங்கட்சுபா தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில் நிகழந்த மோசமான விபத்து
..... நடந்தது என்ன ?
..... நடப்பது என்ன ?
... ..நடக்க வேண்டியது என்ன?

1.தொழில் முறை பாரம் தூக்கி கொண்டு ( industrial crane ) தளத்தை ஒளிரச்செய்ய பயன்படுத்துவது வழக்கம்
இந்த கிரேனை ஓட்டியவர்தான் முதல் குற்றவாளி என ஒரு தகவல். வழக்கமான அனுபவமிக்க ஓட்டுனர் இல்லாமல் ஓரளவு புதிய ஓட்டுனர் ஓட்டியதாகத் தெரிகிறது அவர் கிரேனை நகர்த்தும் போது ஒரு பக்கம் எடை கூடி கிரேன் balance தவறி ஒரு பக்கமாக சாய்ந்து ஒட்டு மொத்தமாக விழுந்து விட்டது என நம்பத் தகுந்த யூனிட் நண்பர்கள் மூலம் தகவல்

2. ஈ வி பி எனும் அந்த படப்பிடிப்பு தளத்தில் சமீப காலத்தில் இது இரண்டாவது விபத்து .. பிகில் படத்திலும் இதே போல உயர்த்தில் இருந்து அதிக எடை உள்ள விளக்கு விழுந்து சில உயிர்களை பல வாங்கியது தெரிந்ததே .. அங்கு மண் பலமாக இல்லையோ என சந்தேகமும் உண்டு .. இதே இடம் பொழுது போக்கு பூங்காவாக இருந்த போது பெரிய சைஸ் ராட்டினம் கட்டுப்பாடு இழந்து விபத்து ஏற்பட்டது . அங்கு கட்டப்பட்ட கட்டிடம் விரிசல் விழுந்து ஒரு பக்கம் சாய்நதே பல ஆண்டுகள் காட்சி அளித்ததும் நினைவுக்கு வருகிறது

3. பொதுவாகவே படப்பிடிப்புக்கு என உருவாக்கப் படும் அரங்கங்கள் பாதுகாப்பு விஷயங்களில் உத்தரவாதமில்லாதவை . அதில் லைட் ஆபீசர்களும் ஸ்டண்ட் வீரர்களும் எடுக்கும் ரிஸ்க் எப்போதுமே அதிகம்தான்

4. இந்த விபத்து மிகவும் துரதிருஷ்டமானது . யாரையும் பழி சொல்ல அல்ல இந்த பதிவு . ஆனால் இதற்கு பிறகும் கவனக்குறைவு தூங்க நேரம் இன்றி தொடர் வேலைகள் உயர் மன அழுத்த வேலைகள் சரியான காப்பீடு திட்டங்கள் இன்றி திரைத்துறை தொடர்ந்தால் சொந்த சூனியம் வைத்துக்கொண்டு நொந்து போகும் முட்டாள் கூட்டம் என்றே பெயர் பெறும்

5. இப்படி ஒரு விபத்து நடந்தாலும் இறந்தவர்களின் உடலை உறவினர்கள் பார்க்க பல மணி நேரம் ஆவதுவும் போலீஸ் விசாரணை போஸட்மார்ட்டம் என சட்ட சிக்கல்களால் எப்போதுதான் உடல் கிடைக்கும் என தெரியாமல் அவர்கள் தவிப்பதுவும்தான் மிகப்பெரிய சோகம் . இதற்கெல்லாம் தீர்வு சொல்ல யாரும் இன்றி நேற்று சவீதா மருத்துவ மனையில் இரவு முழுவதும் சோக காட்சிகளைப் பார்த்த பின் ........ திரைப்படத்துறை .. நமது காவல் துறை சட்டங்கள் ... பதில் சொல்ல முடியாத தனியார் கையறு நிலை மருத்துவமனைகள் என சுழலுமர இந்த வாழ்க்கை மீதே வெறுப்பு வருகிறது

6. இவற்றிற்கு மேலாக இறந்த உதவி இயக்குனர் எங்கள் குடும்ப நண்பர் மதனின் மாப்பிள்ளை என்பது ஆறாத சோகமாக படர்கிறது

7. ஆண்டவா நீ இருப்பதை இப்படி காட்டாதே ... தொடர்ந்தால் நீ இல்லை என்பதே இங்கு பலரின் நிலைப்பாடு ஆகும் ...

8. இயக்குனர் ஷங்கர் மயிரிழையில் தப்பியதும் கமல் உடனடியாக உதவிகள் செய்ததும் தயாரிப்பு நிறுவனமும் ஊழியர்களும் இந்த நிமிடம் வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு பக்கத்திலேயே இருந்து உதவுவதும் சிறிய அளவு ஆறுதல்கள்

Get Breaking News Alerts From IndiaGlitz