மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு நேரில் மரியாதை செலுத்திய விஜய்..!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மனோபாலா இன்று திடீரென காலமான நிலையில் அவருக்கு நடிகர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செய்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குனர் மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் இன்று மனோபாலா உடல் வைக்கப்பட்டு இருக்கும் இடத்திற்கு சென்று நேரில் தனது இறுதி மரியாதை செலுத்தினார். இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் மற்றும் மனோபாலா பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர் என்பதும் மனோபாலா மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்களில் ஒருவர் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உங்களை ஏன் தமிழ் சினிமா மிஸ் பண்ணுதுன்னு தெரியல.. ரைசா வில்சனின் பீச் புகைப்படத்திற்கு நெட்டிசன்ஸ் கமெண்ட்..!

 தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவரான ரைசா வில்சன் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கும் நிலையில் நெட்டிசன்கள்

அப்படிப்பட்ட நட்பு எனக்கு தேவையில்லை: சமந்தா குறித்த கேள்விக்கு நாக சைதன்யா காட்டமான பதில்..!

விவாகரத்து பெற்று பிரிந்தாலும் நட்பாக இருக்கலாம் என்று சமந்தா கூறியது குறித்து நாக சைதன்யா கூறிய போது 'அப்படிப்பட்ட நட்பு எனக்கு தேவையில்லை' என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆஸ்கருக்கு செல்லும் பா ரஞ்சித்தின் அடுத்த படம்.. வேற லெவலில் செயல்படும் படக்குழு..!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கி வரும் அடுத்த திரைப்படத்தை ஆஸ்கர் மற்றும் 8 சர்வதேச விருதுகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அதற்காக வேற லெவலில் சர்வதேச தரத்தில் இந்த படம் உருவாகி வருவதாகவும்

படப்பிடிப்பு தொடங்கும் முன்பே கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள்.. வெற்றிமாறன் மாஸ் பிளான்..!

 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அந்த படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிப்பதற்காக இயக்குனர் வெற்றிமாறன் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மனோபாலா மறைவுக்கு முக ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், இளையராஜா இரங்கல்..!

நடிகர் தயாரிப்பாளர் இயக்குனர் மனோபாலா இன்று திடீரென காலமானது தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் மனோபாலா மறைவிற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின்,