close
Choose your channels

பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி?

Monday, July 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தோனி, சச்சின் உள்பட பல கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக உருவாகி வெற்றி பெற்று வரும் நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் புகழ் பெற்ற ஒரு வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி பந்துவீச்சாளரும் சென்னையின் மருமகனுமான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருப்பதாகவும், இதில் முரளிதரன் கேரக்டரில் விஜய்சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளதால் இந்த படத்திற்கு '800' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.