நாட்டாமை நடிகருக்கு நடுராத்திரியில் சர்பிரைஸ் கொடுத்த மகள்கள்… வைரல் புகைப்படம்!

  • IndiaGlitz, [Monday,August 30 2021]

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகராகவும் மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்து தனக்கென நீங்கா இடம்பிடித்தவருமான நடிகர் விஜய்குமார் தன்னுடைய பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். அவருக்கு அவருடைய மகள்களான அனிதா, ஸ்ரீதேவி, ப்ரீத்தா ஆகிய 3 பேரும் சர்ப்ரைஸ் கொடுத்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்குமார் கடந்த 1943 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 29 ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தவர். இவர் நடிகர் சிவாஜிகணேசன் நடித்த “ஸ்ரீவள்ளி“ திரைப்படத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு அறிமுகமானார். அடுத்து ஒருசில திரைப்படங்களில் துணைக் கதாப்பாத்திரத்தில் நடித்த இவர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான “அவள்ஒரு தொடர்கதை” படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார்.

பின்னர் 70-80 களில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சிவக்குமார், ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, கார்த்திக், சத்யராஜ் எனப்பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் வில்லன், துணைக்கதாபாத்திரம், குணச்சித்திரம் எனப்பல கேரக்டரில் கலக்கிய நடிகர் விஜயக்குமார் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான “கிழக்குச் சீமையிலே” திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் நிரந்தர இடம்பிடித்தார்.

அடுத்து 1994 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான “நாட்டாமை” நடிகர் விஜய்குமாருக்கு இன்னொரு மைல்கல் படமாக அமைந்தது. இந்த நாட்டாமையை இன்றளவும் மறக்காத தமிழ் ரசிகர்கள் நடிகர் விஜயக்குமாரை சில நேரங்களில் நாட்டாமை என்றே அழைத்து வருவதும் பார்க்க முடிகிறது. இந்நிலையில் நடிகர் விஜயக்குமார் தன்னுடைய மகள்கள், பேரக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

பாராலிம்பிக்கில் 4 பதக்கம்… ரவுண்டுகட்டி கலக்கிவரும் இந்திய வீரர்கள்!

மாற்றுத் திறனாளிகளுக்கான 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.

'பாகுபலி' படத்தில் நடித்தும் என்னை யாருக்கும் தெரியவில்லை: 'சார்பாட்டா பரம்பரை' நடிகர்!

எஸ் எஸ் ராஜமவுலி இயக்கிய 'பாகுபலி' படத்தில் நடித்தும் என்னை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை என்றும் ஆனால் என்னை அனைவருக்கும் அடையாளம் காட்டியது 'சார்பாட்டா பரம்பரை

இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கங்கள்: பதக்க மழையில் இந்திய வீரர்கள்!

ஜப்பானில் நடைபெற்றுவரும் இந்திய வீரர்கள் வீராங்கனைகள் பதக்க மழை பொழிந்து வருவது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பாரா ஒலிம்பிக்கில் முதல் தங்கம்: இந்தியா வீராங்கனைக்கு குவியும் வாழ்த்துக்கள்!

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு ஏற்கனவே இரண்டு வெள்ளி பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ள நிலையில் தற்போது

300 நாட்களில் 3 மில்லியன்: யாரும் செய்யாத சாதனையை செய்த சிம்பு!

நடிகர் சிம்பு சுமார் 300 நாட்களில் மூன்று மில்லியன் ஃபாலோயர்களை பெற்றிருப்பது கோலிவுட் திரையுலகில் யாரும் செய்யாத சாதனை என்று கூறப்பட்டு வருவதை அவரது ரசிகர்கள் மிகப்பெரிய அளவில்