நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை:  'தல'யை சந்தித்த விக்ரம்..!

  • IndiaGlitz, [Friday,April 14 2023]

தல தோனியை சந்தித்து அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் விக்ரம் ’நீங்கள் எப்போதும் எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்த தவறியதில்லை' என்று பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு இணையதளத்தில் டிரெண்டாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்பதும் அவர் தோனியின் மிகப்பெரிய ரசிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விக்ரம் அளித்த பேட்டி ஒன்றில் ’நீங்கள் சூப்பர் ஹீரோவாக பல வேடங்களில் நடித்திருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு சூப்பர் ஹீரோ என்றால் யார்? என்று கேட்கப்பட்டது

அப்போது விக்ரம் ஒரு வினாடி கூட யோசிக்காமல் உடனே ’தோனி’ என்று பதில் கூறினார். மேலும் , ’உலகத்தில் எவ்வளவோ நடிகர்கள், அரசியல்வாதிகள் பிரபலங்கள் பலர் இருக்கிறார்கள், ஆனால் எனக்கு தோனி மட்டுமே சூப்பர் ஹீரோ’ என்று தெரிவித்தார். மேலும் ’எனக்கு தோனி தான் தலைவன்’ என்றும் பதில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் தற்போது தோனியை சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் கல் குவிந்து வருகிறது.

நடிகர் விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ’தங்கலான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. மேலும் நடிகர் விக்ரம் ’பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பதும் இந்த படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலகின் செல்வாக்கு மிக்க 100 பிரபலங்கள் பட்டியலில் 2 இந்திய திரையுலக பிரபலங்கள்..!

 அமெரிக்காவின் முன்னணி ஊடகமான டைம்ஸ் உலகின் பிரபலமான 100 நபர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் அதில் இந்திய திரை உலகை சார்ந்த இரண்டு பேர் இடம் பெற்றுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

பைக் ஊர்வலம் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த விஜய் ரசிகர்கள்: வைரல் வீடியோ..!

தளபதி விஜய்யின் ரசிகர்கள் பைக்கில் ஊர்வலமாக சென்று சட்ட மாமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு உதவி செய்த அஜித்.. கணவரின் நெகிழ்ச்சி பதிவு..!

விமான நிலையத்தில் கைக்குழந்தையுடன் வந்த பெண்ணுக்கு நடிகர் அஜித் உதவி செய்தது குறித்து அந்த பெண்ணின் கணவர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

'பொன்னியின் செல்வன் 2':  ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி

குமரி-சென்னை 'விசில் போடு எக்ஸ்பிரஸ்'.. எல்லாமே இலவசம்: சிஎஸ்கே அறிவிப்பு..!

வரும் 30ஆம் தேதி சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியை நேரில் பார்க்க 750 பேர்களை இலவசமாக சென்னை அழைத்து வர சிஎஸ்கே