விஷாலிடம் விஷம் இருப்பது உண்மைதான். மிஷ்கின் அதிரடி பேச்சு

  • IndiaGlitz, [Thursday,March 09 2017]

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் ஐந்து அணியினர்களும் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் விஷாலின் உடம்பு முழுவதும் விஷம் இருப்பதாக கலைப்புலி எஸ்.தாணு கூறிய கருத்துக்கு சினிமா விழா ஒன்றில் இயக்குனர் மிஷ்கின் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது;
விஷாலுக்கு உடம்பு முழுவதும் விஷம் இருப்பதாக கூறுகின்றார்கள். ஆம், சிவபெருமானுக்கு தொண்டையில் விஷம் இருந்தது போல விஷாலுக்கும் கொஞ்சம் இருக்கலாம். ஆனால் அவர் நல்லது மட்டுமே செய்யும் நபர். நடிகர் சங்க தேர்தலின்போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளனர்.
நானும் ஒரு பத்து படங்கள் வரை இயக்கியுள்ளேன். அதில் எனக்கு பிடித்த இரண்டு படங்கள் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' மற்றும் 'நந்தலாலா' ஆகிய படங்கள். ஆனால் இந்த இரண்டு படங்களையும் வெளியிட நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சமல்ல. தயாரிப்பாளர் சங்கம் எனக்கு கொஞ்சம் கூட உதவி செய்யவில்லை. நான் பட்ட கஷ்டம் இனிமேல் எந்த தயாரிப்பாளருக்கும் ஏற்பட கூடாது என்பதற்காகவே விஷால் அணியில் நான் இருக்கின்றேன்
தயாரிப்பாளர் சங்கத்தில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தையும் கண்டிப்பாக ஒரு வருடத்திற்குள் தீர்த்து வைப்போம். அவ்வாறு செய்யவில்லை என்றால் எங்களை கழுத்தை பிடித்து நீங்கள் தாராளமாக வெளியே தள்ளலாம்.
தமிழ் சினிமாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நாங்கள் வேள்வியில் இறங்கியுள்ளோம். இந்த வேள்வியில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்
இவ்வாறு இயக்குனர் மிஷ்கின் பேசினார்

More News

ஜெயேந்திரருடன் டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! பாஜகவுக்கு தூது?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் காஞ்சி சங்கராச்சாரியர்களான ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர்களுக்கும் இடையே சிலகாலம் நல்லுறவு இருந்தாலும் பின்னர் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தல் தேதி அறிவிப்பு. தீபா போட்டியிடுவாரா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி அவருடைய மரணம் காரணமாக கடந்த சில மாதங்களாக காலியாகவுள்ளது.

வரலட்சுமியின் 'சேவ் சக்தி'க்கு ஆன்லைனில் ஆதரவு கொடுப்பது எப்படி?

பிரபல நடிகை பாவனா பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் நடிகைகள் இடையே பல விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

11 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்? தாங்குமா சசிகலா அதிமுக!!

தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா அணியின் மூத்த உறுப்பினர்கள் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆலோசனை கூறினார்களாம்...

இடம் மாறினார் ஓபிஎஸ். தொண்டர்கள் வாழ்த்து

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் சசிகலாவின் அதிகாரத்தில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறையில் இருந்து வீட்டை காலி செய்யும்படி நோட்டீஸ் வந்தது. இதனையடுத்து ஓபிஎஸ் போயஸ் கார்டனில் உள்ள புதிய வீட்டுக்கு குடியேறுவார் என்று கூறப்பட&