வடபழனி கோவிலில் பிச்சை எடுத்த ஜமுனாவுக்கு விஷால் உதவி

  • IndiaGlitz, [Saturday,April 15 2017]

சிவாஜி கணேசன், ஜெயலலிதா, சிவகுமார் ஆகியோர்களுடன் நடித்த குரூப் டான்சர் ஜமுனா என்பவர் சென்னை வடபழனி கோவிலில் பிச்சை எடுப்பதாகவும், அவர் தனக்கு, தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிகர் சங்க செயலாளர் விஷால் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்த செய்தியையும் சமீபத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் ஜமுனாவின் நிலைமையை கேள்விப்பட்ட விஷால் உடனடியாக ஜமுனா அவர்களுக்கு உதவி செய்ய முடிவு எடுத்து அவருடைய மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணனையும் உடனே அவர்களை சந்தித்து தேவையான உதவி செய்யுமாறு அனுப்பினார்.

இருவரும் ஜமுனாவை நேரில் சந்தித்து அவர்களிடம் உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம் என்று தெரிவித்தனர். ஆனால் அவர், என்னை முதியோர் இல்லத்தில் சேர்க்கவேண்டாம். எனக்கு மாதம் மாதம் உதவி தொகை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை நிறைவேற்றுவோம் என்று கூறி புது துணியும் அளித்துள்ளார்கள், மேலும் மாதம் தோறும் 2000 ருபாய் வழங்கவும் வாக்குறுதி அளித்துள்ளனர் . “தேவி அறக்கட்டளை” மூலம் நடிகர் விஷாலின் மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் இந்த உதவி தொகையை வழங்கினார்கள்

விஷாலின் இந்த உதவிக்கு ஜமுனா நன்றி கூறினார். நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்து வரும் விஷாலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More News

தொலைக்காட்சிக்கு மாறுகிறாரா கமல்ஹாசன்?

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 'சபாஷ் நாயுடு' என்ற படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தார்...

சீனு ராமசாமியின் அடுத்த படத்தில் இளையராஜா-யுவன்ஷங்கர் ராஜா

இசைஞானி இளையராஜா ஏற்கனவே மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் இணைந்து 'மெல்ல திறந்தது கதவு, 'செந்தமிழ்ப்பாட்டு' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்...

பாரதிராஜாவுக்கு என்னை பிடிக்காது. ரஜினிகாந்த்

இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் 'பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற சினிமா பயிற்சிப் பட்டறை நிறுவனத்தை நேற்று தொடங்கினார்...

சி.ஆர்.பி.எப் வீரரின் பொறுப்பான தியாகமும், கமல்ஹாசனின் ஆதரவும்

சமீபத்தில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலின்போது பாதுகாப்புக்கு சென்றிருந்த சி.ஆர்.பி.எப் வீரர் ஒருவர் தேர்தல் முடிந்தவுடன் மின்னணு வாக்கு இயந்திரத்தை எடுத்து கொண்டு அலுவலகம் திரும்பி கொண்டிருந்தார்...

தமிழில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ்ப்புத்தாண்டு தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் அனைவருக்கும் குடியரசு தலைவர், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்...