close
Choose your channels

அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமலுக்கு பிரபல நடிகர் வாழ்த்து

Saturday, September 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியலுக்கு தனிக்கட்சி ஆரம்பித்து வருவது உறுதியாகிவிட்ட நிலையில் அவருக்கு பொதுமக்களின் அமோக ஆதரவு கிடைத்துள்ளது என்பது சமூக வலைத்தள பதிவுகளில் இருந்து தெரியவருகிறது. குறிப்பாக அவர் இயக்கும் திரைத்துறையினர்களில் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் தனது சமூக  வலைத்தளத்தில் கமல்ஹாசனின் அரசியல் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: அரசியலுக்கு வருவதை உறுதி செய்த கமல்! அவர் மனத்திண்மையைப்  பாராட்டுகிறேன். இந்த உறுதி இறுதி வரை இருக்க நேர்மையாளரின் சார்பில் வாழ்த்துகிறேன்! என்று ஒரு டுவிட்டிலும், 'வருவது யாராக இருப்பினும், வாழ்த்துவது மரபாக இருப்பினும், மகுடம் தரிக்க வைப்பது மக்களே! என்று மற்றொரு டுவிட்டிலும் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு பின்னர் திரையுலகில் இருந்து கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்த யாரும் இதுவரை ஜொலிக்கவில்லை. எதையும் புதுமையான முறையில் செய்யும் கமல்ஹாசன் இந்த நிலையை மாற்றுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.