நடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம்! அவரே வெளியிட வீடியோ

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

நடிகர் விவேக் செய்த கடைசி சத்தியம் குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில் அவர் கூறியபோது ’திருப்பத்தூர் கல்லூரி ஒன்றில் உலக வனநாள் தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டதாகவும், அதனை நோக்கி நகர்ந்து கொண்டிருந்ததாகவும் திருப்பத்தூர் கிளம்ப தான் திட்டமிட்டு இருந்தாகவும் கூறினார்.

ஆனால் சுகாதாரத் துறை அமைச்சரின் அறிவுரையின்படி கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதிக மாணவர்களை ஓர் இடத்தில் கூடுவது கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் என்று அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து நான் திருப்பத்தூர் கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோருடன் பேசி, அவர்களுடைய அறிவுரையின்படி இந்த நிகழ்ச்சியை கொரோனா அலை குறைந்தவுடன் இன்னொரு நாள் மிகவும் சிறப்பாக நடத்த திட்டமிட்டோம். எனவே இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக இன்னொரு நாள் சிறப்பாக செய்வோம், இதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நான் நம்புகிறேன்’ என்று மாணவர்களுக்கு அவர் சத்தியம் செய்து கொடுத்தார்

திருப்பத்தூர் கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து மிகப்பெரிய அளவில் மரம் நடும் விழாவை நடத்த சத்தியம் செய்து கொடுத்த அவருடைய இந்த கடைசி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் கடைசி வரை அந்த சத்தியத்தை அவர் நிறைவேற்ற முடியாத வகையில் இயற்கை அவரது உயிரை எடுத்து விட்டது என்பது சோகமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More News

விவேக்கின் செயல் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து கூறியது: வீடியோ

மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் குறித்து மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அவர்கள் கூறிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது 

மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது… நடிகர் விவேக் மறைவு குறித்து கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்!

தமிழ் சினிமா உலகில் மங்காத புகழைப் பெற்றவர் நகைச்சுவை நடிகர் விவேக்.

இன்று மாலையளவில் மறைந்த நடிகர் விவேக்கின் உடல் தகனம்...!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நகைச்சுவை நடிகர் விவேக்.அண்மையில் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில்

விவேக் இறப்பிற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இன்று அவர் காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

பஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்!

பெரியவர்களின் காலை தொட்டு வணங்கும் பழக்கம் இந்தியச் சமூகத்தில் பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது.