பத்மஸ்ரீ விருது, அப்துல் கலாமின் உண்மைத்தொண்டர்: விவேக் ஒரு காமெடி சகாப்தம்!

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

தமிழ் திரையுலகின் காமெடி மன்னன் என்று புகழ் பெற்ற கலைவாணர் என்எஸ் கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய காமெடி காட்சிகளோடு சமூக கருத்துக்களையும் பொதுமக்களுக்கு தெரிவிப்பார். அந்த வகையில் நடிகர் விவேக்கின் அனைத்து காமெடியிலும் சமூக கருத்துக்கள் இருக்கும் என்பதால் அவருக்கு சின்ன கலைவாணர் என்ற பட்டமும் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் விவேக் சங்கரன்கோவிலில் கடந்த 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி பிறந்தார். இயக்குனர் சிகரம் கே பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான அவர் ரஜினி, விஜய், அஜீத் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். மேலும் அவர் ‘வெள்ளைப்ப்பூக்கள்’ உள்பட சில படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

நடிகர் விவேக் அவர்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு அவரது கலைச்சேவையை பாராட்டி பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு சிறப்பு விருதான கலைவாணர் விருது அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விவேக் அவர்களுக்கு கடந்த 2015ஆம் ஆண்டு கெளரவ டாக்டர் பட்டமும் வழங்கப்பட்டது.

மூன்று முறை பிலிம்பேர் விருதுகளையும் மூன்று முறை தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற விருதுகளையும் நடிகர் விவேக் பெற்றுள்ளார். சர்வதேச தமிழ் பிலிம் விருது, எடிசன் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் தூதராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் நடிகர் விவேக் நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ள நடிகர் விவேக் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் கடைசி திரைப்படம் ’தாராள பிரபு’ என்பதும் அந்த படத்தில் அவர் கண்ணதாசன் என்ற மருத்துவர் கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் உண்மை தொண்டராக வாழ்ந்த நடிகர் விவேக், அவரது வேண்டுகோளின்படி தமிழகத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த இலக்கை அவர் கிட்டத்தட்ட எட்டிவிட்ட நிலையில் நம்மை விட்டு மறைந்தார் என்பது பெரும் சோகமானது. நடிகர் விவேக் உடல் மறைந்தாலும் அவர் நட்டு வைத்த ஆயிரக்கணக்கான மரக்கன்றுகள் அவருடைய நினைவாக என்றும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

More News

சிவாஜி படப்பிடிப்பில் மறக்க முடியாத நாட்கள்: விவேக் மறைவு குறித்து ரஜினிகாந்த்!

சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார் செய்தி திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது 

'இறப்பு' குறித்து நடிகர் விவேக் பதிவு செய்த டுவிட்!

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான செய்தி திரையுலகினருக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. சின்ன கலைவாணர் என்ற பட்டத்துடன்

மகிழ்ச்சியில் திளைக்க வைத்தவர், சோகத்தில் ஆழ்த்திவிட்டார்: விவேக் மறைவு குறித்து துணை முதல்வர் ஓபிஎஸ்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவேக்கின் மறைவு குறித்து பல்வேறு

விவேக் விட்டு சென்ற பணிகளை தொடர முயற்சிப்பேன்: ராகவா லாரன்ஸ்

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை காலமானதை அடுத்து திரையுலகினர் அவருக்கு தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் விவேக்கின் மறைவு குறித்து பல்வேறு

விவேக் மறைவு: சூர்யா, ஜோதிகா, கார்த்தி நேரில் அஞ்சலி!

சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் மறைவால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது என்பதும், அவருக்காக சமூக வலைதளங்கள் மூலம் கண்ணீர் அஞ்சலியை திரையுலக பிரபலங்கள் செலுத்தி வருகின்றனர்