close
Choose your channels

தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் விவேக்: நற்செய்தி வரலாம் என டுவீட்!

Tuesday, January 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகளை சந்தித்து அரசியல் கட்சியில் இணைந்து வருகின்றனர் என்பது குறித்த செய்திகளை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான நடிகர் விவேக் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் காரணங்களுக்காகவோ, எனது சொந்த காரணங்களுக்காகவோ இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்

இதுகுறித்து நடிகர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: அரசியலுக்கோ/என் சொந்த காரணமாகவோ தமிழக முதல்வர் அவர்களை பார்க்கவில்லை. தமிழ்த் துறவி ”அருட்பா” தந்த வள்ளலார் (1823-1874) தன் வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை ” வள்ளலார் நெடுஞ்சாலை” என்று பெயர் சூட்ட மனு அளித்தேன். இன்முகத்துடன் ஏற்றார். நற்செய்தி வரலாம்’ என்று பதிவு செய்துள்ளார்.

நடிகர் விவேக் சந்திப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: இன்று (26.1.2021) முகாம் அலுவலகத்தில் திரைப்பட நடிகர் திரு.விவேக் அவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.