நடிகர் விவேக் மனைவி கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசின் அரசாணை

சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்த மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவி கோரிக்கை ஒன்றை அளித்த நிலையில் அந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்துள்ள சாலைக்கு விவேக்கின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய மனுவை அளித்தார். இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படும் என தமிழக முதல்வர் கூறியதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் நேற்று சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள், ‘மறைந்த நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டி அரசாணை வெளியிட உத்தரவிட்டுள்ளார் என்றும் மே மாதம் மூன்றாம் தேதி விவேக் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் கூறினார்.

More News

உழைப்பாளர் தினத்தில் உதித்த உழைப்பாளி: அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!

உழைப்பாளர் தினத்தில் உதித்த உழைப்பாளி: அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள்!

டூபீஸ் உடையில் செம கலக்கலான போஸ்: வைரலாகும் ஹன்சிகா புகைப்படம்!

தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா தனது சமூக வலைத்தளத்தில் டூ பீஸ் உடையில் கலக்கலான போஸ் கொடுத்து உள்ளதை அடுத்து இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

'சூரரை போற்று' இந்தி ரீமேக்: மாஸ் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்!

சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தின் மாஸ் அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் ஜிவி பிரகாஷ் வெளியிட்டு உள்ளார் .

'ஜாலியா நீ வாடி இது பிரைவைட் பார்ட்டி தான்': 'டான்' சிங்கிள் பாடல்

சிவகார்த்திகேயன் நடித்த 'டான்'  திரைப்படம் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன்… முக்கிய வீரரைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

ஐபிஎல் 15 ஆவது சீசன் தொடருக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ்