close
Choose your channels

மாரடைப்பால் சிகிச்சை பெற்ற நடிகர் விவேக் காலமானார்: கோலிவுட் அதிர்ச்சி

Saturday, April 17, 2021 • தமிழ் Comments

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவருக்கு ஆஞ்சியோகிராம், எக்மோ உள்ளிட்ட கருவிகளின் உதவியால் சிகிச்சை அளித்து வருகிறோம் என்றும் மருத்துவர்கள் நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.

இதனையடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என்று கோலிவுட் திரையுலகினர் அரசியல் தலைவர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சற்று முன் வெளியான அதிர்ச்சித் தகவலின்படி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இன்று 4:35 மணிக்கு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் விவேக் ஆழமான செய்தியால் கோலிவுட் துறைமுகம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது

Get Breaking News Alerts From IndiaGlitz