close
Choose your channels

மெகா கூட்டணிக்கு இடையில் கமலின் மகாசக்தி கூட்டணி: பிரபல நடிகர்

Tuesday, March 5, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பாராளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை முதலில் அதிமுக ஆரம்பித்தாலும் முதலில் முடித்தது திமுக கூட்டணிதான். இன்று அந்த கூட்டணியின் இறுதி நிலவரம் வெளியாகிவிட்டது. தேமுதிகவின் முடிவு தெரிந்துவிட்டால் அதிமுக கூட்டணியின் இறுதி நிலவரமும் தெரிந்துவிடும்.

இந்த நிலையில் இந்த இரு மெகா கூட்டணிகளுக்கு இடையில் கமல்ஹாசன் கட்சி மற்றும் தினகரன் கட்சியின் தேர்தல் வியூகம் குறித்த செய்தியே வெளிவரவில்லை, இந்த இரு கட்சிகளும் தனித்து போட்டியிட போகிறதா? அல்லது இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதா? என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் இருமெகா கூட்டணிகளுக்கு இடையில் கமலின் கூட்டணி என்ன ஆகும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரபல காமெடி நடிகர் விவேக், 'எத்தனை மெகா கூட்டணி இருந்தாலும் பொதுமக்கள் என்ற மகாசக்தியுடன் கமல் கூட்டணி வைத்துள்ளார். பொதுமக்கள் என்ற மகாசக்தியின் கையில்தான் தேர்தல் முடிவு உள்ளது.

ஜனநாயக நாட்டில் எத்தனை கூட்டணி அமைந்தாலும், முடிவு என்பது மக்கள் கையில்தான் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தல் முடிவை உண்மையிலேயே கணிக்க முடியவில்லை. அனைத்து மக்களை போல் அடுத்த ஆட்சி யார் கையில் என்பதை நானும் எதிர்பார்க்கின்றேன்' என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.