close
Choose your channels

32 வருடங்கள் தந்த நிதானம்: கமலுக்கு நன்றி கூறிய விவேக்

Wednesday, August 21, 2019 • தமிழ் Comments

இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் கடந்த 1987ஆம் ஆண்டு இயக்கிய 'மனதில் உறுதி வேண்டும்' என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் விவேக். அவர் நடிக்க வந்த 32 ஆண்டு காலத்தில் தற்போதுதான் முதல்முறையாக கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடிக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து விவேக் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:

நிகழும் வரை சொப்பனம்; நிகழும் போதோ பக்குவம். 32 ஆண்டுகள் தந்த நிதானம். முழுமையான ஈடுபாட்டுடன் உழைப்பதே இக்கணப் பிரதானம். எப்போதும் போல் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். கமல் சார் க்கு என் அன்பு; ஷங்கர் அவர்களுக்கு என் நன்றி. லைக்காவுக்கு என் வாழ்த்துக்கள்' 

'இந்தியன் 2' படத்தில் கமல்ஹாசனுடன் பெரும்பாலான காட்சிகளில் இணைந்து நடிக்கும் அளவில் விவேக் கேரக்டர் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இந்த படம் விவேக் திரையுலக வாழ்வில் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz