நமக்கு அமேசானில் ஆர்டர் போட மட்டும்தான் தெரியும்: விவேக்

  • IndiaGlitz, [Saturday,August 24 2019]

உலகிற்கு 20% ஆக்சிஜனை தந்து கொண்டிருக்கும் அமேசான் காடுகள் தீயால் கடந்த சில நாட்களாக எரிந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த தீ விபத்து குறித்து உலக நாடுகளின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மிகுந்த கவலையை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அமேசான் காடுகள் அழிந்து கொண்டிருப்பது குறித்து நடிகர் ஜிவி பிரகாஷ் ஒரு டுவீட்டை பதிவு செய்த நிலையில் தற்போது நடிகர் விவேக் ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

'நம்மால் அமேசான் காட்டில் எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைக்க முடியாது. நம்மால் அமேசானில் பொருட்களை வாங்கவும் அமேசான் பிரைம் பார்க்கவும் ஆர்டர் போட மட்டும்தான் தெரியும். ஆனால் நாம் ஒன்றிணைந்தால் ஒன்றை செய்ய முடியும். நாம் இருக்கும் இடத்தில் மரங்களை தொடர்ந்து நடுவதன் மூலம் ஒரு புதிய அமேசான் காடுகளை உருவாக்க முடியும். அமேசான் காடுகளில் எரியும் தீயை அணைக்க வருணபகவான் உதவி செய்ய பிரார்த்தனை செய்வோம்' என்று விவேக் கூறியுள்ளார்.

More News

மூளையில் பிரச்சனை: மூன்றாவது டெஸ்ட்டில் இருந்து விலகிய ஸ்மித்!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆசஷ் தொடர் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற வார்த்தையை தூக்கி எறியுங்கள்: பா.ரஞ்சித்

இந்தியாவில் பலவிதமான மதங்கள், மொழிகள் இருந்தாலும் இந்தியா என்று வரும்போது அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத்தான் நமது முன்னோர்கள் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று கூறி வந்தனர்.

'இந்தியன் 2' படத்தில் இருந்து விலகியது ஏன்? ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

மதுமிதா வீடியோவுக்கு அபிராமியின் ஆத்திரமான பதில்!

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தது முதல், கூலாக ரசிகர்களுடன் செல்பி எடுத்து ஜாலியாக காட்சியளிக்கும் அபிராமி, மதுமிதா குறித்து ஆத்திரமாக அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில்

லாஸ்லியா மாதிரி நல்ல பொண்ணா பாரு! 'சிக்ஸர்' டிரைலர் விமர்சனம்

வைபவ், பாலக் லால்வானி, சதீஷ் நடிப்பில் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிக்ஸர்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது