close
Choose your channels

கடவுளுக்கு நன்றி: குஷ்பு கார் விபத்து குறித்து பிரபல நடிகர்!  

Wednesday, November 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகையும் பாஜக பிரபலமுமான குஷ்பு இன்று காலை வேல் யாத்திரையில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து கடலூர் சென்று கொண்டிருந்த நிலையில் செங்கல்பட்டு அருகே அவரது கார் விபத்துக்குள்ளானது என்பதும் அதிர்ஷ்டவசமாக அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் கடலூருக்கு மாற்று காரில் சென்று அங்கு நடந்த வேல் யாத்திரையில் கலந்து கொண்டார். இந்த நிலையில் குஷ்புவின் கார் விபத்துக்குள்ளானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அவரிடம் நலம் விசாரித்தனர். தன்னிடம் நலம் விசாரித்து அனைவருக்கும் நன்றி என ட்விட்டரில் குஷ்பு பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குஷ்பு கார் விபத்து குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த பிரபல நடிகர் விவேக், ‘குஷ்பு இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தப்பித்துள்ளார் என தெரிகிறது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். ஓட்டுனரையும் மிகவும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்கச் சொல்லுங்கள். இந்த விபத்தில் எந்த விபரீதத்தையும் ஏற்படுத்தாத கடவுளுக்கு நன்றி’ என பதிவு செய்துள்ளார். நடிகர் விவேக்கின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.