இன்று மாலையளவில் மறைந்த நடிகர் விவேக்கின் உடல் தகனம்...!

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் நகைச்சுவை நடிகர் விவேக்.அண்மையில் ஓமந்தூர் அரசு மருத்துவமனையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட விவேக், மக்களிடம் தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ளுமாறு அறிவுரையும் செய்தார். கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பு மருந்தின் முக்கியத்துவம் குறித்து கூறியிருந்தார். இந்நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். விவேக் அவர்களுக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை காலை காலமானார்.

இந்நிலையில் அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று மாலை விருகம்பாக்கம் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக, குடும்ப உறுப்பினர்கள் சார்பாக கூறப்பட்டுள்ளது. மறைந்த சின்னக்கலைவாணரான விவேக்-கின் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவேண்டும் என தமிழக அரசு, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

More News

விவேக் இறப்பிற்கும் தடுப்பூசிக்கும் தொடர்பா? சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்

பிரபல காமெடி நடிகர் விவேக் அவர்கள் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில் நேற்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இன்று அவர் காலமான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

பஞ்சாப் அணி வீரரின் காலைத் தொட்டு வணங்கிய சிஎஸ்கே வீரர்… வைரல் புகைப்படம்!

பெரியவர்களின் காலை தொட்டு வணங்கும் பழக்கம் இந்தியச் சமூகத்தில் பழங்காலம் தொட்டே இருந்து வருகிறது.

விவேக் எங்கயும் போகல, அவன் உங்களோட தான் இருக்கான்: வடிவேலு கண்ணீர் அஞ்சலி

காமெடி நடிகர் விவேக் இன்று காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்து வருகிறோம்

வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் ஆடிய சிஎஸ்கே வீரர்… கிரவுண்டே அதிர்ந்துபோன சம்பவம்!

நேற்றைய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பார்த்து ஒட்டுமொத்த சிஎஸ்கே வீரர்களும் வியந்து போயினர்.

அறிவுப்பூர்வமான வசனங்கள் மூலம் சிரிக்கவும் வைத்தவர் விவேக்: பிரதமர் மோடி

பிரபல நகைச்சுவை நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை காலமான நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்