close
Choose your channels

முழங்கால் அளவில் பாவாடை அணிந்து படவிழாவுக்கு வந்த பிரபல நடிகர்!

Wednesday, August 3, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் ஒருவர் திரைப்பட விழாவுக்கு பாவாடையுடன் வந்ததையடுத்து திரைப்பட விழா குழுவினர் உள்பட ரசிகர்கள் பலர் ஆச்சரியமடைந்தனர். இது குறித்த புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் நடித்துள்ள ’புல்லட் ட்ரெயின்’ என்ற திரைப்படம் வரும் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விழா ஒன்றுக்கு பிராட் பிட் வருகை தந்த போது அவர் பாவாடை போன்ற உடையை அணிந்து வந்திருந்தார்.

இந்த உடையை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்த போது இது குறித்த கேள்வி ஒன்றுக்கு அவர் வித்தியாசமான பதிலளித்தார். ‘நாம் அனைவரும் ஒருநாள் சாகப்போகிறோம், அதனால் எதையாவது வித்தியாசமாக செய்வோம்’ என்று அவர் தனது உடை குறித்து கூறியுள்ளார்.

பிராட்பிட் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘புல்லட் ட்ரெயின்’ திரைப்படம் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளிலும் வரும் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. 90 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் உருவாகிய இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் ஜப்பானிய நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது என்பதும், ஜப்பானிய மொழியிலும் இந்த படம் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.