close
Choose your channels

செல்ல மகளுக்கு அழகு தமிழ் கற்றுக்கொடுக்கும் கன்னட நடிகர்… வைரலாகும் வீடியோ!

Saturday, January 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா சினிமாவில் ராக்கிங் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் யஷ் தனது செல்ல மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நவீன் குமார் கவுடா என்ற இயற்பெயரைக் கொண்ட நடிகர் யஷ் கடந்த 2008 ஆம் ஆண்டு “மோகினா மனசு“ எனும் கன்னடத் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அடுத்து இவரது நடிப்பில் வெளியான “கேஜிஎஃப்“ திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக மாறிப்போனார். இதனால் ரசிகர்கள் அவரை ராக்கிங் ஸ்டார் என்றே அழைத்து வருகின்றனர்.

நடிகர் யஷ் கன்னட சினிமா நடிகையான ராதிகா பண்டிட்டை கடந்த டிசம்பர் 2016இல் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு டிசம்பர் 2018இல் அய்ரா எனும் பெண் குழந்தையும் அக்டோபர் 2019 இல் யாதர்வ் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது. இதில் அய்ரா சுட்டித்தனமான க்யூட் எக்ஸ்பிரசனைக் காட்டி ஏற்கனவே மீடியாக்களில் பிரபலமாகி வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது அப்பாவுடன் விளையாடிய குழந்தை அய்ரா தமிழ் உயிரெழுத்துகளை அச்சுப் பிசகாமல் சொல்லி நம்மையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.