மாறுவேடத்தில் ஒரு தேவதை.. மகளை வர்ணித்த யாஷின் க்யூட் வீடியோ!

’கேஜிஎஃப்’ மற்றும் ‘கேஜிஃஎப் 2’ ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகர் யாஷ் சற்று முன் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

’கேஜிஎஃப்’ மற்றும் ‘கேஜிஃஎப் 2’ ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்த நடிகர் யாஷ், இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலம் ஆனார் என்பதும் குறிப்பாக ‘கேஜிஃஎப் 2’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் ஆகி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரு திரைப்படமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘கேஜிஃஎப் 2’ வெற்றியை அடுத்து, அடுத்த படத்திற்காக யாஷ் தயாராகி வரும் நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது மனைவி ராதிகா மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் சற்று முன் அவர் தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவின் கேப்ஷனாக அவர் ’மாறுவேடத்தில் ஒரு தேவதை! ஆம் அவர்தான் அய்ரா’ என்று பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது என்பதும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அஜித்தின் 'துணிவு' படத்துடன் கனெக்சன் ஆன உதயநிதியின் 'மாமன்னன்'

அஜித்தின் 'துணிவு' படத்துடன் உதயநிதியின் 'மாமன்னன்'திரைப்படம் கனெக்சன் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

அவங்க ஒரு டேமேஜ் ஹீரோயின்: 'காபி வித் காதல்' நடிகையை கேலி செய்த சுந்தர் சி

சுந்தர் சி இயக்கிய 'காபி வித் காதல்' திரைப்படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

மீண்டும் கார்த்தியுடன் இணையும் பிரபல நடிகை .. இயக்குனர் இவர் தான்!

நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த நிலையில் தற்போது மீண்டும் கார்த்தி - ராஷ்மிகா மந்தனா ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக

முதல் பாதியின் இயக்குனர் வெற்றிமாறன், 2ஆம் பாதியின் இயக்குனர் நான்: பிரபல இயக்குனரின் திட்டம்

ஒரு திரைப்படத்தின் முதல் பாதியின் இயக்குனர் வெற்றிமாறன் என்றும், இரண்டாம் பாதியில் இயக்குனர் தான் என்றும் பிரபல இயக்குனர் ஒருவர் திட்டமிட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

'வெந்து தணிந்தது காடு' நாயகிக்கு அடித்த அதிர்ஷ்டம்.. பிரபல நடிகருடன் அடுத்த படம்!

சிம்பு நடிப்பில், கௌதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில், வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.