பொல்லார்டு மாதிரி பொளந்து கட்டுறார்: யோகிபாபுவின் மாஸ் பேட்டிங் வீடியோ!

  • IndiaGlitz, [Tuesday,January 26 2021]

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு தற்போது கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் அதுமட்டுமின்றி ஒருசில திரைப்படங்களில் ஹீரோவாகவும் அவர் நடித்து வருகிறார் என்பதும் ஏற்கனவே அவர் ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஷான் இயக்கத்தில் உருவாகவிருக்கும் ’பொம்மை நாயகி’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கடலூர் பகுதியில் நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் படப்பிடிப்பின் இடையே அவர் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடிய வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவை தொலைக்காட்சி பிரபலம் மாகாபா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவில் யோகிபாபுவின் மாஸ் பேட்டிங் ஷாட்கள் உள்ளன.

இதனை பார்த்து ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். ’தலைவன் வேற லெவல்’ என்றும் ’பேட்டிங்கில் பொல்லார்டு போல பொளந்து கட்டுகிறார்’ என்றும் ’தலைவனை ஐபிஎல் போட்டிக்கு ரிஜிஸ்டர் பண்ண சொல்லுங்க’ என்றும் கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. நகைச்சுவையில் மாஸ் காட்டும் யோகி பாபு பேட்டிங்கிலும் மாஸ் காட்டுவது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது